Banner Wishes

செய்திகள்

Tuesday, January 22, 2013

இன்று - ஜன.23: சரித்திர நாயகன் நேதாஜி சுபாஸ் சந்திரபோஸ் பிறந்தநாள்


ஒரு விடுதலை வீரன் மரணிப்பதில்லைஅவன் அந்த தேசத்தை நேசிக்கும் ஆயிரம் ஆயிரம் தேசபக்தர்களின் இதயங்களில் என்றும் வாழ்ந்து கொண்டே இருப்பான்அப்படியான ஒரு விடுதலை வீரன் தான் நேதாஜி என அழைக்கப்படும் "நேதாஜி சுபாஸ் சந்திரபோஸ்ஆவார்.

யார் இந்த நேதாஜி...?


"அவசரக்காரர்ஆத்திரக்காரர்என்று கூறினார் மகாத்மா காந்தி. "படபடப்பானவர்பண்படாதவர்என்று கூறினார் ஜவகர்லால் நேருஆனால் வரலாறு ஏற்றுக்கொண்டது அவர் ஒரு விடுதலை வீரன் என்று!!! கொள்கை வீரன் என்று!!!

தாய் நாட்டின் விடுதலைக்காக தனது 24 வயதில் I.C.S என்ற உத்தியோகத்தை துாக்கி எறி்ந்தார். 35 வயதில் தனக்கு சொந்தமாக இருந்த கட்டாக் நகரில் தான் பிறந்த மாளிகையை தேசத்திற்காக அர்பணித்தார். 41 வயதில் காங்கிரஸ் கட்சியின் தலைவராக 1938-ம் வருடம் நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் பதவி ஏற்றார். வயதானவர்கள் மட்டூமே வகித்த பதவிக்கு இளவயதில் நேதாஜி தேர்வு செய்யப்பட்டதும், தொண்டர்களின் எதிர்பார்ப்பு அதிகமாக இருந்தது. ‘பேச்சுவார்த்தை இனி செல்லுபடி ஆகாது. மக்களை ஒன்று சேர்த்துப் போராடுவோம்; வெள்ளையரை விரட்டுவோம். சுதந்திரம் மட்டுமே நம் ஒரே குறிக்கோள்!' என தீவிரமாக சுபாஷ் இறங்கினார். ஆனால், அவரது அதிரடி நடவடிக்கைக்கு ஒத்துழைக்க, கட்சியின் மற்ற தலைவர்கள் தயாராக இல்லை.

ஏதேதோ கனவுகளுடன் பதவிக்கு வந்த நேதாஜி, தன் கைகள் கட்டப்பட்டு இருப்பதை உணர்ந்தார். இந்தப் பதவி பரிசு அல்ல...விலங்கு எனப் புரிந்து, பதவியை ராஜினாமா செய்தார். "பதவியில் இருந்து சாதிப்பதுதான் புத்திசாலித்தனம். இனி மக்களை எப்படித் திரட்டமுடியும்? நீங்கள் தோற்று விட்டீர்கள்" என நெருங்கியவர்களே குறைப்பட்டுக்கொண்டார்கள். "இல்லை. காங்கிரஸ் தலைவர் பதவி இல்லாமலே என்னால் இந்தியாவுக்குச் சுதந்திரம் வாங்கித் தர முடியும். இது எனக்கு ஒரு பின்னடைவு மட்டுமே; தோல்வி அல்ல! நம்பிக்கை இழக்கும் வரை தோல்விகள் வருவதில்லை!" என்றார் நேதாஜி. ஆம், சுவாமி விவேகானந்தரின் இந்த வேதவாக்குதான், நேதாஜியின் தாரக மந்திரம்.

44 வயதில் தன் தேச விடுதலைக்காக தாய் நாட்டை விட்டு பிரிந்து அயல்தேசம் சென்றார்இப்படியாக தனது தேசத்தின் விடுதலைக்காக முழுமையாக அர்பணிப்புடன் போராடிய ஒரு விடுதலை வீரன் இவர்.
தேசத்தை விட்டு வெளியேறி இருப்பினும் கொண்ட கொள்கையில் ஒரு உறுதியுடன் அன்றைய உலக ஒழுங்கை நன்கு விளங்கிக் கொண்டு அதனை தனது தேசத்தின் விடுதலைக்காக மாற்றியமைத்த ஒரு அரசியல் தலைவனும் கூட இவர்.

தன் உயிரையே பணயம் வைத்து ஜெர்மனியிலும்ஜப்பானிலும்கிழக்காசிய நாடுகளிலும் அலைந்து திரிந்து ஒரு தற்காலிக சுதந்திர அரசை அமைத்து இந்திய தேசிய இராணுவத்தைத் திரட்டி போரிட்டு உலக வரலாற்றிலேயே ஒரு புதிய சாதனையை அத்தியாயத்தை உருவாக்கிவர் கூட இந்த சுபாஷ் சந்திரபோஸ் அவர்களே.!
ஜெர்மனிஜப்பான்இத்தாலி ஆகிய நாடுகளுடன் நேதாஜி ஒப்பந்தம் ஒன்றை மேற்கொண்டு அதில் கைழுத்திட்டார்இந்திய நாட்டில் வேரூன்றிய அன்னிய ஆட்சியை அகற்றுவதற்குத் தேவையான அனைத்து உதவிகளையும் செய்வதாக இந்த மூன்று நாடுகளும் ஒப்பந்தத்தில் கூறியிருந்தன

அன்றைய கால கட்டம் 2ம் உலகப்போர் இடம்பெற்ற காலமாதலால் அங்கு காணப்பட்ட அரசியல் சாதக தன்மையை தனது தேசத்தின் விடுதலைக்கான இலகுவழியாக மாற்றும் எண்ணத்துடன் அவர் செயற்பட்டார்.இதை அன்று மகாத்மா காந்தி அவர்கள் கடுமையாக எதிர்த்தும் இருந்தார்.இருந்தும் இவர் தனது பாதையை மாற்றியதாக இல்லை.

1943 
அக்டோபர் 21ம் தேதியன்று காலையில் சிங்கப்பூர் "தைதோவா கெகிஜோவில் நடைபெற்ற மகாநாட்டில் தற்காலிக சுதந்திர இந்திய அரசை பிரகடனப்படுத்திய நேதாஜி, "நமக்கென்று ஓர் இராணுவமும் அமைக்கப்பட்டு விட்டதனால்நமக்கென்று ஒரு சுதந்திர அரசை அமைப்பது சாத்தியமும்அவசியமும் ஆயிற்றுஇந்தியாவின் முழு விடுதலைக்கான இறுதிப்போரை நடாத்துவதற்காகவே இந்தத் தற்காலிக அரசு பிறந்திருக்கின்றது" - என்று முழங்கினார்.

இதனை தொடர்ந்து அக்டோபர் 23ம் தேதியில் இருந்து நவம்பர் 18ம் தேதிக்குள் ஜப்பானபர்மாபிலிப்பைன்ஸ்ஜெர்மனிகுரொஷியாசீனாமஞ்சுகோஇத்தாலிதாய்லாந்து போன்ற அரசுகள் தற்காலிக சுதந்திர இந்திய அரசை உத்தியோகபூர்வமாக அங்கீகரித்தன.அதற்கு அத்திவாரமாக ஏற்கனவே இந்திய தேசிய இராணுவத்தைக் கட்டியெழுப்பி பயிற்சி கொடுத்திருந்தார்.பயிற்சி முற்றுப்பெற்ற வீரர்களைப் பகுதி பகுதியாக பிரித்தார்சிங்கப்பூர்பர்மாமலேயாதாய்லாந்து நாடுகளுக்குத் தன்னுடைய படை வீரர்களை அனுப்பினார்.

நேதாஜியின் இந்திய தேசிய இராணுவத்தின் அங்கத்தவர்களாக ஜான்சிராணி என்கிற பெண்கள் படையும்பாலர் படையும் இருந்தனபன்னிரண்டு வயதிற்கு மேல் பதினெட்டு வயதிற்கு உட்பட்ட இளையவர்களின் படையே பாலர் படையென அழைக்கப்பட்டதுஇந்தப்படையில் ஆயிரத்துக்கு மேற்பட்ட இளையவர்கள் இருந்தார்கள்அத்துடன் தனது படைகளை கட்டுக்கோப்பாகவும் ஒழுக்கமுள்ள சிறந்த வீரர்களாகவும் அவர் உறுவாக்கியிருந்தார்.இதனை அவதானித்த ஜப்பான் அரசு தான் 2ம் உலகபோரில் கைப்பற்றிய அந்தமான் நிக்கோபர் தீவுகளை நேதாஜியிடமே கையளித்தது.

1943
ம் ஆண்டு டிசம்பர் மாதம் 31ம் நாள் இந்தியாவின் மூவர்ணக் கொடியை அந்தமான் தீவில் நேதாஜி பறக்க விட்டார். 1944 மார்ச் 18 இந்திய மண்ணில் நேதாஜியின் படைகள் கால் பதித்தது.தொடர்ந்து நிலங்களை கைப்பற்றியபடி முன்னேறிய இவரது படைகள் அமெரிக்க அரசிடம் அடிபணிந்த ஜப்பானால் ஆட்டம் காணத்தொடங்கியது.படைகள் மீண்டும் பர்மாவிற்கு பின்வாங்கின,இருந்தும் அந்த தோல்வியை அவர், "இது நாம் ஆடிய முதல் ஆட்டம் இதில் நாம் தோற்றாலும் அடுத்துவரும் வெற்றிகளுக்கு இது படிக்கல்லாக அமையும்என்றார்.

1945 
ஆகஸ்ட் மாதம் 18ம் நாள் ஜப்பானுக்கு போகும் இவர் பயணம் செய்த விமானம் வழியில் தீப்பற்றி விபத்துக்குள்ளாகியதால் இவர் மரணமடைந்ததாக இன்று வரை நம்பப்படுகிறது. மாபெரும் சாம்ராஜ்யத்தை அசைக்கும் முயற்சியில் பின்னடைவு ஏற்பட்டாலும், அதனை ஒரு தோல்வியாக எடுத்துக்கொள்ளாமல், நம்பிக்கை யோடு அடுத்தடுத்த முயற்சிகளில் இறங்கியதால்தான், ஒவ்வொரு இந்தியனின் மனதிலும் இன்றளவும் இருக்கிறார் நேதாஜி

No comments:

Post a Comment