Banner Wishes

செய்திகள்

Sunday, January 13, 2013

கண்ணா லட்டு தின்ன ஆசையா - இனிப்பான வமர்சனம்


நம்ம "முருங்கைக்காய்" ஸ்பெஷலிஸ்ட் பாக்யராஜின் இயக்கம் மற்றும் நடிப்பில் வெளியாகி  சூப்பர் டூப்பர் ஹிட்டான "இன்று போய்  நாளை வா" திரைப்படத்தில்  சில..பல.. (ஒரிஜினலில் இருந்த ஹிந்தி டீச்சர் இங்க பாட்டு வாத்தியார், உடற்பயிற்சி மாஸ்டர் இங்க டான்ஸ் மாஸ்டர் எனபட்டி டிங்கரிங் பாத்து வெளிவந்திருப்பது  தான்  இந்த '..தி.'. என்னதான் நமக்கு நன்கு பரிச்சியப்பட்ட கதைனாலும், காமெடி காமெடி  காமெடி என்ற நெய் ஊற்றி இனிப்பான லட்டாக பரிமாறிஇருக்கிறார்கள். 

படத்தின் 3 ஹீரோக்களில் நம்மை இம்ப்ரெஸ் செய்பவர் சாட் சாட் நம்ம பவரே. படத்தில் பவர், பவராகவே வாழ்ந்திருக்கிறார். அவர் தனக்குத்தானே செய்து கொள்ளும் விளம்பர உத்திகள், பஞ்ச் டயலாக்குகள், என அவர் ரவுசு செய்யும் (வரும்) ஒவ்வொரு இடத்திலும் கை தட்டல்  மற்றும் விசில் சத்தத்தால் அரங்கமே அதிருகிறது. இதுவரை "பவர் ஸ்டாரை" டம்மியாக பார்த்த அனைவருக்கும் அவரின் பவர் இத்திரைப்படத்தின் வாயிலாக இனி உலகறியும். தமிழ் சினிமாவிற்கு ஒரு புதுவரவு. கீப்ட்அப் பவர்.

அடுத்து கதையின்  ஒரு நாயகன், படத்தின் ஒரு தயாரிப்பாளர்,என பன்முக வேடமேற்றிருக்கும் சந்தானம், SMS, Boss வரிசையில் ..தி.-வும் அடங்கும்படம் முழுவதும் ரசிக்க மற்றும் சிரிக்க வைக்கும் கவுன்ட்டர்கள் .  அதிலும் ஹீரோயினிடம் ப்ரொபோஸ் செய்யும் காட்சி, பவர்  & சந்தானம் கவுன்ட்டர்ஸ் பிரமாதம்கலக்குறே 'சந்தானம்'.

அடுத்து படத்தின் கடைசி நாயகன், திரைக்கு புதிய நாயகன் "சேது" (ஹீரோயினால் லவ்வபடுபவர்), முதல் படமே கை கொடுத்துள்ளது. மென்மேலும் வளர வாழ்த்துக்கள். ஹீரோயின் விஷாகா "பிடிச்சிருக்கு" படத்தில் சோகமே உருவான அழுமூஞ்சி கேரக்டரில் நடித்தவர்.  இந்த படத்தில் கவர்ச்சி, குத்தாட்டம் என வெளுத்து வாங்குகிறார்
 பாட்டு வாத்தியார் VTV கணேஷ், கோவைசரளா, தேவதர்ஷினி, என படத்தின்  ஒவ்வொரு கேரக்டரும் காமெடி,எனும்  தாரக மந்திரத்தை சரியாக பயன்படுத்தி இருக்கிறார்கள்.

"தமன்" இசையில் ரீமிக்ஸ் பாடல்கள் ரசிக்க வைக்கிறதுமொத்தத்தில் கண்ணா லட்டு தின்ன ஆசையா? தின்னதின்ன  திகட்டாத லட்டு.

மேலும் பொங்கல் வெளியீடு திரைப்படங்களின் விமர்சனங்களுக்கு.....

No comments:

Post a Comment