Banner Wishes

செய்திகள்

Tuesday, January 1, 2013

2012 - ம் ஆண்டிற்க்கான பயர் பாக்ஸ் உலாவி - ன் சிறந்த ஆடான் / எக்ஸ்டெண்சன்ஸ் (add-on / Extensions)

இணையத்தில் ஒவ்வொரு உலாவியும் தனக்கென்று ஆடான் / எக்ஸ்டெண்சன்ஸ் (add-on / Extensions) ஐ கொண்டிருக்கின்றன.! இந்த add-on கள்  பிரவுசர்களுக்குக் கூடுதல் வசதிகளைத் தருகிறது. மொஸில்லா நிறுவனமானது எக்ஸ்டன்ஷன் புரோகிராம்களை அறிமுகப்படுத்தியதுடன், மற்றவர்களும், அதே போல தயாரித்து வழங்க அனுமதித்துள்ளது! கடந்த 2012 - ம் ஆண்டில் மக்களின்  வரவேற்பை பெற்ற 12  எக்ஸ்டன்ஷன் (add-on) (ஒவ்வொரு மாதமும் வெளியான எக்ஸ்டன்ஷன்களில், சிறந்த ஒன்று ) - களை  கீழ் காண்போம்.

டிசம்பர் மாதம் வெளியான எக்ஸ்டன்ஷன்களில், சிறந்ததாக பரிந்துரைப்பது,
collusion இது பாதுகாப்பு தரும் புரோகிராம் ஆகும். எந்த இணைய தளங்கள், நாம் இணையத்தில் உலா வரும் வழிகளைக் கண்காணிக்கின்றன என்று நமக்குத் தெரிவிக்கும் பணியினை இது மேற்கொள்கிறது. இவ்வாறு பெறப்படும் தகவல்கள், எவ்வாறு ட்ரேக்கர்களுக்கும் (trackers) நிறுவனங்களுக்கும் இடையே பரிமாறப்படுகின்றன என்பதைக் காட்டுகிறது.
தரவிறக்கம்  செய்ய  : https://addons.mozilla.org/firefox/addon/collusion/?src=externaldenblog


நவம்பரில் கிடைத்த புரோகிராம்களில் சிறப்பானது URL Fixer என்பதாகும். 
நாம் அட்ரஸ் பாரில், இணைய முகவரிகளை டைப் செய்திடுகையில் ஏதேனும் பிழை ஏற்பட்டால், உடனே அந்த பிழைகளை இது திருத்தி அமைக்கும். எடுத்துக்காட்டாக google.con என டைப் செய்தால், அதனை google.com என அமைக்கும்.
தரவிறக்கம்  செய்ய  : https://addons.mozilla.org/firefox/addon/urlfixer/?src=externaldenblog

அக்டோபரில் வந்தவற்றில் சிறப்பானது  PearlTrees என்னும் புரோகிராம்.
 புதிய இந்த சோஷியல் லைப்ரரியில், நாம் விரும்புவதைச் சேர்த்து, வகைப்படுத்தி மற்றவர்களுடன் பகிர்ந்து கொள்ள உதவுகிறது. இதன் மூலம் உங்களுக்கு பிரியமானவற்றை உங்கள் விரல் நுனிகளில் வைத்து மகிழ முடிகிறது.
தரவிறக்கம்  செய்ய  : https://addons.mozilla.org/firefox/addon/pearltrees/?src=externaldenblog

செப்டம்பரில் மாதம் வெளியான எக்ஸ்டன்ஷன்களில், TwitBin என்னும் புரோகிராம் அதிக பயனுள்ளதாக உள்ளது. ட்விட்டர் தளத்தில் நாம் மேற்கொள்ளும் அனைத்து உரையாடல்கள், செய்திகள் மற்றும் பிறவற்றை மொத்தமாக இணைத்துப் பார்க்க உதவுகிறது.
 தரவிறக்கம்  செய்ய  : https://addons.mozilla.org/firefox/addon/twitbin/?src=externaldenblog 

 ஆகஸ்ட் மாத கிடைக்கப் பெற்ற எக்ஸ்டன்ஷன்களில் சிறந்தது Memonic Web Clipper
இதன் மூலம், இணையப் பக்கம் ஒன்றில், உங்களுக்குப் பிடித்த பகுதிகளை மட்டும், தனித்தனியே தேர்ந்தெடுத்து, மொத்தமாக நாம் விரும்பும் இடத்தில் பதிந்து, சேவ் செய்திட உதவுகிறது.
 
தரவிறக்கம்  செய்ய  : https://addons. mozilla.org/firefox/addon/memonicwebclipper/?srcexternaldenblog

ஜூலை மாதத்தின் சிறந்த புரோகிராம் 365 scores Notifier
இது விளையாட்டு ரசிகர்களுக்கு மிகவும் பயனுள்ள புரோகிராம். எல்லா ஸ்கோர், அப்டேட் மற்றும் விளையாட்டு வீரர்கள் குறித்த அனைத்து தகவல்களையும் சேர்த்து வைக்க உதவுகிறது.
 தரவிறக்கம்  செய்ய  : https://addons.mozilla.org /firefox/addon/365scoresnotifier/?src=externaldenblog

ஜுனில் தரப்பட்ட Do Not Track Plus என்னும் எக்ஸ்டன்ஷனே சிறந்தது
(பயர்பாக்ஸ் ஏற்கனவே Do Not Track என்னும் வசதியினைக் கொண்டுள்ளது. இது நீங்கள் செல்லும் இணையதளத்திடம், உங்களின் ஆன் லைன் செயல்பாடுகளைப் பின்பற்றிச் செல்ல வேண்டாம் என்று கூறுகிறது.)
ஆனால், இந்த வகையில் இன்னும் சில கூடுதல் வசதிகளைத் தருகிறது. இதன் மூலம், என்ன வகையான ட்ரேக்கிங் தொழில் நுட்ப வழிகளை, இணைய தளங்கள் கையாள்கின்றன என்று நீங்கள் பார்க்கலாம். தெரிந்து கொண்டு அவற்றைத் தடுக்கலாம். 
 தரவிறக்கம்  செய்ய  : https://addons.mozilla.org /enUS/firefox/addon/donottrackplus/?src=externaldenblog.

மே மாதம் வெளியான Cheevos for Firefox என்னும் எக்ஸ்டன்ஷன் புரோகிராம் உங்களுக்கு பயர்பாக்ஸ் பிரவுசர் குறித்து, அதன் கட்டமைப்பு குறித்து, மறைத்து தரப்படும் சில தகவல்களை அறிந்து கொள்ள உதவுகிறது   தரவிறக்கம்  செய்ய  : https://addons.mozilla.org/ enUS/ firefox/addon/cheevos/?src=externaldenblog 

ஏப்ரலில் வெளியான Tab Badge என்னும் புரோகிராம் மூலம், நாம் பல தளங்களைப் பார்த்துக் கொண்டிருக்கையில், ஏதேனும் ஒரு தளத்தில் உள்ள இணையப் பக்கத்தில், புதியதாக ஒன்று சேர்க்கப்பட்டால், அந்த டேப்பின் வழி சுட்டிக் காட்டும். 
தரவிறக்கம்  செய்ய  : https://addons.mozilla.org/firefox/addon/tabbadge/?src=externaldenblog 

மார்ச் மாதம் கிடைக்கப் பெற்ற புரோகிராம்களில், Fabtabs என்பது பயர்பாக்ஸ் பிரியர்களிடையே மிகப் பிரசித்தி பெற்றதாகும். இது நாம் பார்த்துக் கொண்டிருக்கும் இணைய தளத்தினை நன்கு ஆய்வு செய்து, அதில் பயன்படுத்தப்பட்ட நிறங்களில் ஒன்றைத் தேர்ந்தெடுத்து, அதற்கான டேப்பை அந்த வண்ணத்தில் அமைக்கிறது. இதன் மூலம் டேப்கள் வண்ணமயமாகக் காட்சி அளிப்பது மட்டுமின்றி, வண்ணத்தின் துணையுடன், மிக எளிதாக தளங்களுக்கிடையே நாம் சென்று வர முடிகிறது. 
தரவிறக்கம்  செய்ய  : https://addons. mozilla.org/firefox/addon/fabtabs?src=externaldenblog 

பிப்ரவரியில் வெளியாகி, அனைவரின் கவனத்தையும் ஈர்த்த எக்ஸ்டன்ஷன் புரோகிராம் AllinOne Sidebar. இணையதள விண்டோக்களை, சைட் பார் பேனலாக அமைத்துத் தருகிறது. இதன் மூலம் பல விண்டோக்களினால் ஏற்படும் குழப்பத்தினைத் தீர்க்க முடிகிறது.
தரவிறக்கம்  செய்ய  : https://addons.mozilla.org/firefox/addon/allinonesidebar/?src=externaldenblo

ஜனவரியில் வெளியான அதிக பயனுள்ள எக்ஸ்டன்ஷன், நம் பாஸ்வேர்ட்களை, முறைப் படுத்தும் ஒரு சீரிய புரோகிராம் ஆகும். இதன் பெயர் LastPass Password Manager. இது நாம் அடிக்கடி செல்லும் இணைய தளங்களுக்கான பாஸ்வேர்ட்களை, சீராக நினைவில் வைத்து நமக்குத் தருகிறது. இதன் மூலம் இணைய தளங்களைப் பார்வையிடுவது எளிதானதாகவும், பாதுகாப்பு மிகுந்ததாகவும் அமைகிறது. எத்தனை பாஸ்வேர்ட்களைத்தான் ஞாபகத்தில் வைத்துக் கொள்வது? என்று அலுத்துக் கொள்பவர்களின் உற்ற தோழன் இந்த புரோகிராம். 
தரவிறக்கம்  செய்ய  : https://addons.mozilla.org/firefox/addon/lastpasspasswordmanager/?src=externaldenblog


நன்றி  - தினமலர்

No comments:

Post a Comment