Banner Wishes

செய்திகள்

Wednesday, January 16, 2013

புத்தகம் - கலக்கல் விமர்சனம்


 கோடிக்கணக்கான பணம் புதைக்கப்பட்ட ஒரு  இடத்தின் குறிப்பு ஹீரோ சத்யாவுக்கு ஒரு புத்தகத்தின் மூலமாக கிடைக்கிறது. சத்யாவ தன் நண்பர்கள் உதவியுடன் அந்த பணத்தை எடுத்துக்கொள்கிறார். ஆனால் பணம்  அமைச்சர் சுரேஷ்க்கு உரிமையானது, அவர் தன் பணத்தை அடைய சத்யாவை தேடுகிறார். இதற்கு ஜெகதிபாபு உதவுகிறார். ஹீரோ தப்பித்தாரா? அமைச்சர் பணத்தை  கைபற்றினாரா? என்ற ஹீரோ & வில்லன் சடுகுடு ஆட்டமே இந்த "புத்தகம்".!
கதையை  கேட்கும்போது ஏற்படும் எதிர்பார்ப்பு, திரையில் பார்க்கும்போது இல்லை. இந்த படத்தின் இயக்குனர் விஜய் ஆதிராஜ், சின்னத்திரை பின்புலமாக வந்தவர் என்பதாலோ..என்னவோ.. திரைக்கதையில் சீரியல் வாடை தலைத்தூக்கிறது. திரையில் தோன்றும் பல கதாபாத்திரங்களும் சீரியலில் பார்த்து பழக்கப்பட்ட முகங்களாகவே உள்ளது. ஹீரோ, ஹீரோயின் காதல் காட்சிகள் தமிழ் சினிமாவின் அரைத்த மாவுதான். முதல்பாதி முழுக்க இந்த மாவு தான் நிறைந்து காணப்படுகிறது. இரண்டாம் பாதியே ரசிக்கும்படி உள்ளது.

ஹீரோவாக புதுவரவு சத்யா (நடிகர் ஆர்யாவின் தம்பி), ஒரு புதுமுக நடிகராக படத்திற்கு வேண்டிய மட்டும் நடித்திருக்கிறார். ஹீரோயினாக ரகுல் பரித், தொலைக்காட்சி பணியாளராக வருகிறார், வழக்கமான தமிழ்ப்படகதாநாயகி செய்ய வேண்டியதை செய்துள்ளார். மனோபாலா காமெடி(கடி) செய்துள்ளார். வர வர..  இவர் காமெடிகள்  "எப்டி இருந்த நான் இப்டி ஆய்டேன்"  போல் உள்ளது.

இசை ஜேம்ஸ் வசந்தன். நம்பவே முடியவில்லை. ஜேம்ஸ் வசந்தன் இசை "காணமல் போனவர்" பட்டியலில் உள்ளது. ,சுரேஷ் வில்லனாக மிரட்டுகிறார் .ஜெகதிபாபு , சந்தான பாரதி, பாத்திமா பாபு, என அவரவர் வேலையை செவ்வனே செய்துள்ளனர். 

மொத்தத்தில் இந்த புத்தகத்தில் "ஆரம்பத்துள்ள மற்றும்  நடுவுல கொஞ்சம்...கொஞ்சம்..பக்கத காணோம்"

மேலும் பொங்கல் வெளியீடு திரைப்படங்களின் விமர்சனங்களுக்கு.....

No comments:

Post a Comment