Banner Wishes

செய்திகள்

Saturday, January 5, 2013

அமெரிக்க பார்லிமென்ட்டில் பகவத் கீதை படித்து பதவி ஏற்ற பெண்மணி


வாஷிங்டன்: அமெரிக்காவின், ஹவாய் பகுதியை சேர்ந்த, துளசி கபார்டு, கடந்த  நவம்பர் மாதம்  நடந்த தேர்தலில், ஹவாய் பகுதியிலிருந்து, ஜனநாயக கட்சி சார்பில் பிரதிநிதிகள் சபைக்கு தேர்வு செய்யப்பட்டார். புதிதாக தேர்வு செய்யப்பட்டவர்கள், நேற்று முன்தினம், எம்.பி.,க்களாக பதவி ஏற்றனர்.

துளசி கபார்டு, இந்தியர் அல்ல. இவருடைய தந்தை, மைக் கபார்டு, தற்போது செனட்டராக உள்ளார். இவரது தாய் கரோல் போர்டர், கல்வி அதிகாரியாக உள்ளார். அமெரிக்க பிரதிநிதிகள் சபை சபாநாயகர், ஜான் போனர், புதிய உறுப்பினர்களுக்கு பதவி பிரமாணம் செய்து வைத்தார். அப்போது துளசி கபார்டு, பகவத் கீதையை படித்து, உறுதி மொழி ஏற்றார். இது குறித்து துளசி கூறியதாவது:
என் தாய் இந்து. தந்தை கிறிஸ்துவர்: பகவத் கீதை, மன அமைதியை தருவது. வாழ்க்கையின் இக்கட்டான தருணங்களில், நமக்கு வழிகாட்டுவது. இளம் பருவத்திலேயே, பகவத் கீதை எனக்கு கற்பிக்கப்பட்டது. என் தாய் இந்து. தந்தை கத்தோலிக்க கிறிஸ்துவராக இருந்தாலும், அவரும் மந்திர ஜபம் செய்கிறார். இதனால், தான் எனக்கு, இந்து மதத்தில் ஆர்வம் ஏற்பட்டது. இந்துவாக இருப்பதில் பெருமைப்படுகிறேன்.

இவ்வாறு துளசி கூறினார். ஹவாய் சட்டசபை உறுப்பினராக, 21 வயதில் பதவி ஏற்றவர் துளசி. வளைகுடா போரில் பங்கேற்பதற்காக, சட்டசபை உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்தார்.

கலிபோர்னியாவிலிருந்து, ஜனநாயக கட்சி சார்பில் தேர்வாகியுள்ள, இந்திய வம்சாவளியை சேர்ந்த டாக்டர் அமி பெராவும், பிரதிநிதிகள் சபை உறுப்பினராக பதவி ஏற்றுக்கொண்டார். இவருடைய தந்தை குஜராத்தை சேர்ந்தவர். அமெரிக்க பார்லிமென்ட் உறுப்பினராக தேர்வாகியுள்ள மூன்றாவது இந்தியர் அமி பெரா. 1950ல், தலிப் சிங்கும், 2005ல், குடியரசு கட்சி சார்பில், பாபி ஜின்டாலும், எம்.பி.,யாக பதவி வகித்துள்ளனர்.


நன்றி  - தினமலர் (to read original post)

No comments:

Post a Comment