Banner Wishes

செய்திகள்

Saturday, April 13, 2013

நம்முடனே உடன்கட்டை ஏறும் நம் இணைய தகவல்கள் - கூகுள் புதிய வசதி

இன்றைய நவீன வலையுலகத்தில், நம்மில் பலரும் நமது தனிப்பட்ட மற்றும் சுயவிபரங்கள்  கோப்புகள்,புகைப்படங்களை பகிர்ந்து / சேமித்து வைத்துள்ளோம். ஒரு வேளை நாம் "இவ்வுலகிலே"  இல்லாத போது அல்லது நாம் இணைய உலகை விட்டு நிரந்தரமாக வெளிவரும் போது, இணையத்தில் உள்ள நம் மெயில் அக்கவுண்ட், சமூக வலைத்தளப் பக்கம் மற்றும் அவற்றில் உள்ள டேட்டாக்கள் என்ன ஆகும்..? என்று இணையவாசிகள் பலரும் யோசிப்பது உண்டு. 


அதற்கென ஒரு வசதியை (Inactive Account Manager) கூகுள் நிறுவனமானது அறிமுகப்படுத்தி, இணைய உலகில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஆம்! ஒருவரது இறப்புக்குப் பின் சம்பந்தப்பட்டவரின் தகவல்களை அழித்திடும் இந்த புதிய வசதியை ஜி-மெயில் (Gmail), கூகுள் ப்ளஸ் (Google+), ப்ளாக்கர் (Blogger), பிகாஸா (Picasa Web Albums),கூகுள் டிரைவ் (Google Drive), கூகுள் வாய்ஸ் (Google Voice), யூடுப் (YouTube)உள்ளிட்ட சேவைகளில் வழங்குகிறது. 


ஒரு கணக்கைச் செயலிழக்க வைப்பதற்கான தேதி குறிக்கும் உணர்வுப்பூர்வமான விஷயத்தை கூகுள் நிறுவனம் செயல்படுத்தி இருக்கிறது. இப்படி ஒரு வசதியை ஏற்படுத்திய முதல் முன்னணி நிறுவனம் என்ற சிறப்புக்குச் சொந்தக்காரர் ஆகியிருக்கிறது கூகுள் நிறுவனம். 

இதற்கு இரண்டு விதமான வாய்ப்புகள் தரப்பட்டுள்ளது. 
முதல் வாய்ப்பு: ஒரு பயனாளி தனது அக்கவுண்டை முழுமையாக அழித்திட ஒரு கால அவகாசத்தை அமைத்து கொள்வது. இந்த கால அவகசமானது, பயனாளியின் கடைசி லாகினிலிருந்து (Last Login) கணக்கிடப்படும்.


இரண்டாவது வாய்ப்பு:  தனக்கு நம்பகமான (1-10) நண்பர்கள் அல்லது குடும்ப உறுப்பினர்கள் முன்கூட்டியே பரிந்துரைத்து, தன் மறைவுக்குப் பிறகு அந்த நபர்களுக்கு தனது அக்கவுண்ட் செயலிழப்பை தெரியப்படுத்திவிட்டு  (வேண்டுமெனில் தனது தகவல்களையும் பகிர்ந்து கொள்ளலாம்.) கூகுள் மூலமாகவே கணக்கை அழிப்பது.


பயனாளியின் கணக்கை அழிக்கும் முன்னர் , பயனாளி பதிந்துள்ள மொபைல் மற்றும் மெயிலுக்கு எச்சரிக்கை குறுஞ்செய்தி, மின்னஞ்சல் அனுப்பப்படும்.


இந்தப் புதிய வசதியின் வழியாக , ஒரு பயனாளி தன்  சுயவிபரங்களை , டேட்டாக்கள் எப்போதும் ரகசியமாகப் பாதுகாக்க உதவும்  என  என்று கூகுள் நிறுவனம் தெரிவித்துள்ளது. 

இதுவரைத் தயக்கம் காட்டி வந்த ஃபேஸ்புக், ட்விட்டர் உள்ளிட்ட முன்னணி சமூக வலைத்தளங்களும், கூகுளின் இந்தப் புதிய வசதிக்குக் கிடைக்கும் வரவேற்பைப் பொருத்து, தனது முடிவை எடுக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 

 மேலும் கூகுளின் இந்த வசதி தொடர்பான தகவலுக்கு சொடுக்குக 

No comments:

Post a Comment